அஜ்மலும், கதீஜாவும் சென்னையின் மையப்பகுதியில் இருந்த அந்த பிரம்மாண்டமான மருத்துவமனை வளாகத்தில் நுழைந்து, வரவேற்பறைக்கு சென்று தாங்கள் கொண்டு வந்திருந்த அந்தக் கடிதத்தை அங்கிருந்த வரவேற்பாளாரிடம் கொடுத்ததுமே, அவர்களின் ராஜ உபசாரம் தொடங்கியது. "டாக்டர் சூரியோட லெட்டர் கொண்டு வந்திருக்காங்க," என்றபடி அந்தப் பெண் பரபரப்பாக, 'டை' அணிந்து கொண்டிருந்த ஒருவாரிடம் போய் காதில் ஏதோ சொல்ல, அவர் பதறியடித்துக் கொண்டு இவர்களை நோக்கி வந்தார்.
"வெல்கம் டு அவர் ஹாஸ்பிட்டல் சார்," என்று வந்தனம் சொல்லி விட்டு,"நேத்து ராத்திரியே டாக்டர் சூரி எங்களுக்கு போன் பண்ணி சொல்லிட்டார் சார். உங்களுக்காக ஒரு வி.ஐ.பி.சூட் ஏற்கனவே ‘ப்ளாக்’ பண்ணி வைச்சிட்டோம் சார். பேஷியன்ட் எங்கே சார்" என்று வார்த்தைக்கு
நூறு 'சார்' போட்டுப் பேசினார். "வெளியே ஆம்புலன்ஸில் இருக்காரு," என்று அஜ்மல் சொன்னது தான் தாமதம். அந்த அதிகாரி உடனேயே வார்டு பாய்களை அழைத்தார்.
"வெளியே ஆம்புலன்ஸ் ஒண்ணு வந்திருக்கே! பார்த்து பேஷியன்டை எமர்ஜென்சிக்குக் கொண்டு போக வேண்டியது தானே! என்ன பண்ணிட்டிருக்கீங்க" என்று சாடினார். "ஏற்கனவே பேஷியன்ட் எமர்ஜென்சியிலே தான் இருக்கார் சார்," என்று அவர்கள் சொல்லவும்,
அஜ்மலுக்கும் கதீஜாவுக்கும் ஆச்சாரியம் தாளவில்லை. இவ்வளவு செல்வாக்கா டாக்டர் சூரிக்கு, அதுவும் உலகப்புகழ் பெற்ற இந்த மருத்துவமனையில்உ
இது போதாதென்பது போல, வெள்ளைக்கோட்டணிந்த இரண்டு இளம் டாக்டர்கள் ஓடி வந்தனர். "சார்! இப்ப காட்பாடியிலிருந்து வந்த பேஷியன்டோட அட்டெண்டர் நீங்க தானேஉ பேஷியண்டோட கேஸ் ஷீட், ப்ரிஸ்க்ரிப்ஷன் எல்லாம் எங்கே சார்? சீனியர் டாக்டர் கேட்கிறாரு!" எனவும் அஜ்மல் வாயடைத்துப் போய், தன் கையிலிருந்த குண்டு ·பைலை அவர்களிடம்
கொடுத்தான். அடுத்த ஐந்து நிமிடங்களில் எமர்ஜென்சியே பரபரப்பானது. சிறிது நேரம் கழித்துஅஜ்மலையும், கதீஜாவையும் அழைத்தார்கள்.
"பேஷியன்ட் உங்களோட அப்பாவா சார்" என்று கேட்ட அந்த சீனியர் டாக்டர்,"வைட்டல்ஸ்
நார்மலாத் தானிருக்கு. ஒண்ணும் பயப்படத் தேவையில்லை. எதுக்கும் ஐ.சி.யூவிலேயே வைச்சு கவனிச்சிக்க சொல்லி டாக்டர் சூரி நேத்து போன் பண்ணியிருந்தாரு! கொஞ்சம் பேப்பர்ஸிலே நீங்க கையெழத்துப் போட்டிட்டு, உங்க ரூமுக்குப் போய் இருங்க. கொஞ்ச நேரத்திலே கார்டியோ
தொராசிக் சர்ஜன், அனஸ்தெடிஸ்ட் வந்து உங்கப்பாவோட கண்டிஷனைப் பார்த்திட்டு, எப்ப சர்ஜாரி பண்ணறதுன்னு முடிவு பண்ணுவாங்க!"
அஜ்மலும், கதீஜாவும் அவருக்கு நன்றி தொரிவித்து விட்டு, போட வேண்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு, அவர்களுக்கென்று ஒதுக்கப் பட்டிருந்த அந்த ஆடம்பரமான அறைக்குள் நுழைந்ததும் ஏனோ, பலி ஆடுகளைப் போல பேந்த பேந்த முழித்தனர்.
"என்னங்கஉ பணம் கட்ட சொல்லி யாருமே கேட்கலியேஉ" கதீஜா குழம்பியபடி கேட்டாள். "இந்த ரூம் என்ன இவ்வளவு அமர்க்களமாயிருக்குஉ நாம எப்பவுமே ஜெனரல் வார்டுக்குத் தானே போவோம்உ"
"இதுக்கெல்லாம் பணம் நாம கட்டப்போறதில்லை," என்று அஜ்மல் பதில் அளித்தான்."எல்லாம் டாக்டர் சூரியே பார்த்துக்குவாரு!"
"அப்ப உங்க வாப்பா ஆப்பரேஷனுக்குப் பணம்உ" என்று மீண்டும் கதீஜா கேட்டாள். "எல்லாம் டாக்டர் சூரி கட்டுவாரு," என்று தலை கவிழ்ந்தபடியே சொன்னான் அஜ்மல்."நாம ஒரு பைசா கூடத் தர வேண்டியதில்லே!"
"இதென்னங்க ஆச்சாரியமாயிருக்குஉ எழுபத்தைஞ்சு ரூபாய் ·பீசிலே கூட ஒரு ரூபாய் குறைஞ்சா அந்த ஆளு அப்படிக் குதிப்பாரு! அவரு ஏங்க நமக்காக இவ்வளவு பணம் செலவு பண்ணனும்உ" என்று குழம்பியபடி கேட்டாள் கதீஜா.
'நமக்காக இல்லை; உனக்காக,' என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டான் அஜ்மல். ஆயிற்று! ஒரு வழியாக சென்னைக்கே வந்தாகி விட்டது. இனியும் கதீஜாவிடம் உண்மையை மறைத்துப் பயனில்லை என்று எண்ணிக் கொண்ட அஜ்மல், அவளிடம் கனத்த இதயத்துடன் எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினான். அஜ்மலின் அப்பா இஸ்மாயில் காட்பாடியில் ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலையில் பணி புரிந்து வந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. காட்பாடியிலேயே மிகவும் புகழ் பெற்ற இதய நோய் நிபுணர் டாக்டர் சூரியிடம் சென்று காண்பித்தனர்.
"இவருக்கு உடனே இதயத்திலே ஆபரேஷன் பண்ணணும்," என்று சொல்லி விட்டார் அவர்.
அஜ்மலும் ஒரு சாதாரணத் தொழிலாளி தான். அதுவும் அன்றாடங்காய்ச்சி. அவனுக்கும் கதீஜாவுக்கும் நான்கு குழந்தைகள் இருந்தன. தினம் இரண்டு வேளை சாப்பிடுவதற்கே அவர்கள் போராட வேண்டியிருந்தது. இந்த நிலையில் அப்பாவுக்கு எங்கே லட்சக்கணக்கில் செல்வு செய்து ஆபரேஷன் நடத்துவது என்று அவன் எண்ணிக் கொண்டிருந்தான். இறைவன் செயலோ, அல்லது இயற்கையின் விளையாட்டோ, இஸ்மாயில் அடுத்த சில மாதங்களில் நன்கு குணமாகி விட்டது போலத் தோன்றவும், டாக்டர் சூரி வீணாகத் தங்களைப்
பயமுறுத்தி விட்டார் என்று கருதிய அஜ்மல் அவரை நோரில் பார்த்துக் கண்டபடி திட்டி விட்டு வந்து விட்டான். அத்தோடு விட்டிருக்கலாம், எவர் பேச்சையோ கேட்டு, டாக்டர் சூரி இஸ்மாயிலுக்கு இதய நோய் இருப்பதாகப் பொய் சொல்லித் தன்னிடமிருந்து பணம் கறக்க முயன்றதாக அவர் மீது ஒரு பொய் வழக்கும் போட்டு விட்டான். அவனுடைய போதாத காலம், மூன்று மாதங்களிலேயே அந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு, டாக்டர் சூரி மீது எந்தத் தவறும் இல்லை என்றும், பொய் வழக்கு போட்ட அஜ்மல் மீது அவதூறு வழக்கு தொடர டாக்டர் சூரிக்கு முழு உரிமையும் இருக்கிறதென்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சும்மா இருப்பாரா டாக்டர் சூரிஉ தீர்ப்பு வந்த இரண்டொரு நாளிலேயே, அஜ்மல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்ததோடு, ஐந்து லட்ச ரூபாய் நஷ்ட ஈடாகவும் கேட்டிருந்தார். ஆரம்பத்தில் சிலுப்பிக்கொண்டிருத அஜ்மலுக்கு, அவனது நல்ல் நண்பர்கள் அறிவுரை வழங்கினர்.
"அஜ்மல்பாய்! உங்களுக்கு நாலு கொழந்தைங்க இருக்கு! இந்த வக்கீலுங்க பேச்சை நம்பி மேல் கோர்ட்டு, ஹை கோர்ட்டுன்னு போனீங்கன்னா அப்புறம் என்ன ஆகிறதுஉ சாட்சிக்காரன் காலில் விழுகிறதை விட சண்டைக்காரன் காலிலே விழறது தான் புத்திசாலித்தனம். இந்தப் பிரச்சினையை நீங்க ரெண்டு பேரும் பேசித் தீர்த்துக்கிறது தான் நல்லது."
அஜ்மலுக்கு இந்த உண்மை உறைக்க நிரம்ப நாளாகியது. ஒவ்வொரு முறையும் அலைச்சலும், செல்வுமாக சேர்ந்து அவனைப் பாடாய்ப் படுத்தத் தொடங்கிய பிறகு தான், நண்பர்கள் சொன்னதன் பொருளை அவன் புரிந்து கொண்டான். உண்மை தான்! நான்கு குழந்தைகள், ஒரு மனைவி, ஒரு இதயனோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பா - இவர்களைப் பராமாரிப்பதை விட்டு விட்டு, அவன் பணத்தையெல்லாம் கோர்ட்டுக்கும் வக்கீலுக்கும் கொண்டு போய்க் கொடுத்துக் கொண்டிருந்தான். இது எத்தனை நாள் தாக்குப் பிடிக்கும்?
முதலில் தனது வக்கலுடன் சென்று டாக்டர் சூரியை சந்தித்து சமாதானமாகப் போக வேண்டினான். 'கெட் அவுட்' என்று இரைந்து அவர்களை வெளியேற்றினார் டாக்டர் சூரி. பிறகு என்னென்னமோ முயற்சிகள் செய்து தோற்ற பிறகு, 'பெண் என்றால் பேய் இரங்குமே' என்ற கடைசி நப்பாசையுடன் கதீஜாவையும் அழைத்துக் கொண்டு போய், டாக்டர் சூரியின் கால்களில் விழுந்தாவது அவர் மனதை மாற்றி விடலாமென்று முடிவு செய்தான் அஜ்மல். அதன்படியே, அவர்கள் இருவரும் ஒரு நால் டாக்டர் சூரியின் மருத்துவமனைக்கு, இரவு நேரமாகப் போய் சேர்ந்தனர். இந்த முறை டாக்டர் சூரி கொஞ்சம் இறங்கி வந்தார். "உங்க வொ·பைக் கொஞ்சம் வெளியே இருக்க சொல்லுங்க," என்று சொன்னார் டாக்டர் சூரி."உங்க கிட்டே நான் கொஞ்சம் தனியாப் பேசணும்."
கதீஜா குறிப்பறிந்து எழுந்து வெளியே சென்று காத்திருக்கத் தொடங்கினாள். உள்ளே...! "எனக்கும் உங்களைக் கோர்ட்டுக்கு இழுத்து கஷ்டப்படுத்தணுமுன்னு ஆசையில்லை பாய்," என்றார் டாக்டர் சூரி. "ஆனா எனக்கு நீங்க தேவை இல்லாம பிரச்சினையை உருவாக்கிட்டீங்க. என்னைக் கோர்ட்டுக்கு இழுத்திட்டீங்க. அந்த மூணு மாசமும் நான் பட்ட பாடு எனக்குத் தான்
தொரியும்." "ஏதோ யார் யார் பேச்சையோ கேட்டுட்டுப் பண்ணிட்டேன் டாக்டர்," என்று கண்ணீர் மல்கக் கூறினான் அஜ்மல்."பொரிய மனசு பண்ணி என்னை மன்னிச்சு விட்டிருங்க சார்!" "தப்பு செய்தவங்க தண்டனையை அனுபவிச்சே தான் ஆகணும்," என்று உறுதிபடக் கூறினார்
டாக்டர் சூரி."நான் தப்பே பண்ணாம மூணு மாசம் கோர்ட்டு வாசப்படி ஏறி இறங்கலியா?
நீங்களும் உங்க தப்புக்கு ஒரு விலை கொடுத்தே தீரணும்."
"என் கிட்டே என்ன சார் இருக்கு? நானே ஒரு அன்னாடங்காய்ச்சி," என்று கெஞ்சினான் அஜ்மல்.
"நான் அப்படி நினைக்கலே," என்று புன்னகைத்தார் டாக்டர் சூரி."உங்க கிட்டே எனக்குக் கொடுக்க ஒரு பொருள் இருக்கு. அதை நீங்க கொடுத்தீங்கன்னா, என் கேசை நான் வாபஸ் வாங்கிருவேன். அது மட்டுமில்லை, என்னோட சொந்த செலவிலே உங்கப்பாவுக்கு சென்னையிலேயே பொரிய ஆஸ்பத்திரியிலே சல்லிக் காசு செலவு வைக்காம ஆபரேஷன் பண்ணிருவேன்."
அஜ்மல் குழம்பினான். அப்படியென்ன பொருள் அவனிடம் இருக்கிறது? அதைக் கொடுத்தால் வாப்பாவுக்கு இலவசமாக ஆபரேஷனாமே? "சொல்லுங்க டாக்டர்..என்னன்னு சொல்லுங்க டாக்டர்!" என்று பரபரத்தான் அஜ்மல்."என்
கிட்டே இருக்கிறது எதைக் கேட்டாலும் நான் கொடுக்கறேன் டாக்டர்."
"எனக்கு ஒரு ராத்திரிக்கு..ஒரே ஒரு ராத்திரிக்கு உங்களோட வொய்·ப் கதீஜா வேணும்," என்று சொல்லி முடிப்பதற்குள், அஜ்மலின் கைகள் டாக்டர் சூரியின் சட்டையைப் பற்றிக் கொண்டிருந்தன. "ஏண்டா, என்ன ¨தைரியமிருந்தா இப்படிப் பேசுவேஉ உன்னைக் கொன்னே போட்டிட்டுப் போயிருவேண்டா," என்றபடி அவரது காலரைப் பற்றி இறுக்கினான் அஜ்மல்.
"மறுபடியும் தப்புப்பண்ணறீங்க பாய்," என்று கொஞ்சம் கூட கலக்கமின்றி சிரித்தார் டாக்டர் சூரி."நீங்க எந்த நேரத்திலே என் க்ளீனிக்குக்கு வந்திருக்கீங்க, என்ன பண்ணிட்டிருக்கீங்கன்னு என்னாலே நாளைக்கே நிறைய ஆதாரங்களையும் சாட்சிகளையும் கோர்ட்டிலே கொண்டு வந்து நிறுத்த முடியும்.உங்க பேச்சை யாரும் நம்ப மாட்டாங்க..டாக்டரைப் பார்க்க இவன் ஏன் அந்த நேரத்திலே போன்னான்னு உங்களைத் தான் கேட்டுக் கிழிகிழின்னு
கிழிப்பாங்க..இப்ப வெறும் அவதூறு வழக்கு தான்..அனா, இதையே கொலை முயற்சி வழக்காக்க எனக்கு எவ்வளவு நேரமாகுமுன்னு நினைக்கறீங்கஉ"
அஜ்மல் அதிர்ந்தான். இறைவா, இது என்ன சோதனைஉ அவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை தானேஉ இருக்கிற பிரச்சினை போதாதென்று புது வழக்கு வேறு போட்டு விட்டால், பிறகு என்ன ஆகும்உ ஒரு சிவில் வழக்கு, ஒரு கிரிமினல் வழக்கு - தாங்க முடியுமா?
'டாக்டர்...!"
"வீட்டுக்குப் போய் யோசியுங்க! எனக்கு ரெண்டு நாளுக்குள்ளே பதில் சொல்லுங்க," என்றபடி அவனது கையைத் தட்டி விட்டார் டாக்டர் சூரி.
"உங்க பதில் எனக்குக் கிடைக்கலேன்னா,மூணாவது நாள் உங்களைத் தேடிட்டு போலீஸ் வரும்!"
அந்த இரண்டு நாட்களும் அஜ்மலுக்கு எப்படியிருந்தன என்பதை எப்படி சொல்வதுஉ திரும்பித் திரும்பி என்னென்னமோ யோசித்து யோசித்து, இறுதியில் அவன் முடிவு செய்து விட்டான். இப்போது இத்தனைப் பிரச்சினைகளிலிருந்தும் விடுபட, ஒரு இரவுக்கு தன் ஆசை மனைவி
கதீஜாவை டாக்டர் சூரிக்குக் கொடுப்பதைத் தவிர, வேறு எந்த வழியும் இல்லை என்று உணர்ந்து கொண்டான்.
"நல்ல முடிவெடுத்திருக்கீங்க," என்று பாராட்டினார் டாக்டர் சூரி. "மத்ததெல்லாம் சென்னையிலே பேசிக்கலாம். உங்கப்பாவைக் கூட்டிட்டுப் போக நாளைக்கே ஆம்புலன்ஸ் வரும். உங்களுக்கு அங்கே ராஜ மாரியாதை கிடைக்கும். பணம் காசப்பத்தி நீங்க பயமே பட வேண்டாம். எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன். ஆபரேஷன் நடக்கறதுக்கு முன்னாலே நான் வருவேன்.
ஆபரேஷன் முடியறவரைக்கும் நானும் உங்க கூடவே இருப்பேன். அது வரைக்கும்...ஹி ஹி..ஹி..என்ன புரியுதா பாய்?"
"புரியுது டாக்டர்," என்று பற்களை நறனறவென்று கடித்தபடியே பதில் அளித்தான் அஜ்மல். "அந்த ஹாஸ்பிட்டல்லே நமக்கு மொத்தம் ரெண்டு ரூம். பொரிய ரூமிலே நீங்க, உங்க வொய்·ப், உங்கப்பா மூணு பேரும். சின்ன ரூமிலே நான். ஆனா, நான் வந்ததும் ஆபரேஷன் முடியற வரைக்கும் உங்க வொய்·ப் என்னோட சின்ன ரூமிலே இருப்பாங்க..ஓ.கே?"
"சாரி டாக்டர்," என்றான் அஜ்மல்.
"வக்கீல்ட்டே பேசிடறேன். வேண்ணா நீங்களும் பேசிக்குங்க," என்றபடி ·போனைத் துண்டித்தார் டாக்டர் சூரி.
அஜ்மல் வக்கீலுக்கும் ஒரு போன் போட்டுப் பேசினான். "ஆமாம், டாக்டர் சொல்லறது வாஸ்தவம் தான்," என்று அஜ்மலின் வக்கீலும் ஆமோதித்தார். "ஆனா அவர் கிட்டேயிருந்து போன் வந்தப்புறமா கேசை வாபஸ் வாங்க சொல்லியிருக்கிறாராம்.
என்னன்னு தெரியலே!"
அஜ்மலுக்குத் தொரிந்தது. தன் மனைவியைப் படுக்கையில் போட்டுப் பிழிந்தெடுத்து விட்டு, தனது வெறியைத் தீர்த்துக் கொண்டு, பழி வாங்கி விட்ட திருப்தி கிடைத்தபிறகே, டாக்டர் சூரி போன் செய்வார் என்பது அவனுக்குப்
புரிந்தது.
நடப்பது நடக்கட்டும். ஆனால், சென்னை சென்று சேரும் வரை இந்த விஷயத்தைப் பற்றி மனைவியிடம் பேசக்கூடாதென்று அவன் முடிவு செய்து கொண்டான். குழந்தைகளை நெருங்கிய உறவினர் வீட்டில் விட்டு விட்டு அவர்கள் ஆம்புலன்ஸில் வாப்பாவுடன் சென்னை வந்து சேர்ந்தனர். ஆனால், கதீஜாவின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க வேண்டுமென்றால், அவளிடம்
உண்மையை சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், அவன் ஒன்று விடாமல் அனைத்தையும் சொல்லி முடித்தான்.
அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த கதீஜா அதிர்ந்து போய் சிலை போல
உட்கார்ந்திருந்தாள். "யா அல்லா!" என்று அவளது வாய் முணுமுணுத்தது.
"என்னை மன்னிச்சிரு கதீஜா," என்று அவளை சமாதானப்படுத்த முயன்றான் அஜ்மல்."எனக்கு வேறே வழியே தெரியலே!"
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அறையின் இன்டர்-காம் ஒலித்தது.
Saturday, May 31, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment